பிரதான செய்திகள்

எரிபொருள் நிலையங்களுக்கான நாளாந்த விநியோகம் சாத்தியமற்றது-அமைச்சர் காஞ்சன விஜேசேகர

நாடளாவிய ரீதியிலுள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன மற்றும் லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்களில்  நாளை முதல் தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டு (கியூஆர்) முறைமை அமுல்படுத்தப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இன்று (25) தெரிவித்தார்.

வாகன இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்துக்கமைய எரிபொருள் வழங்கும் முறைமை ஓகஸ்ட் முதலாம் திகதிவரை தொடரும் என்றும் அதன் பிறகு முழுமையாக கியூஆர் முறைமை மாத்திரம் அமுலாகும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், அந்நிய செலாவணி சிக்கல்கள் காரணமாக, அடுத்த 12 மாதங்களில் எரிபொருள் இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டியுள்ளதாக குறிப்பிட்டார்.

எரிபொருள் இருப்பு வரம்பற்றதாக இருந்தாலும் நடைமுறையில் எரிபொருள் நிலையங்களுக்கான நாளாந்த விநியோகம் சாத்தியமற்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
அத்துடன், சுகாதாரம், விவசாயம், மீன்பிடி, சுற்றுலா, கைத்தொழில் மற்றும் சேவை வழங்கும் துறைகளுக்கு, தங்களது வாகனங்களை அனுமதிச்சீட்டு முறைமையில் பதிவு செய்வதற்கான அமைப்புக்கு அணுகல் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

களுத்துறை மாநகர சபை மேயர் அமீர் கைது

wpengine

”மகன் செத்தாலும் பரவாயில்லை, மருமகளின் தாலியறுந்தால் போதுமென்று நினைப்பவர்தான் ஹரீஸ்”- ஜனூபர் தெரிவிப்பு

wpengine

நிதி திரும்புமாயின் விக்னேஸ்வரன் தான் பொறுப்பு! முதலமைச்சரினால் சில வேலைகள் தேங்கி கிடக்கின்றன டெனீஸ்வரன் விசனம்

wpengine