பிரதான செய்திகள்

எரிபொருளுக்கு வரிசையில் காத்திருந்து மீண்டும் ஒரு மரணம்

மீரிகம பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் எரிபொருள் வாங்குவதற்காக வந்த நபர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக பல கேன்களை எடுத்து வந்துள்ளதுடன், எரிபொருளை பெற்று திரும்பிச் செல்ல முற்பட்ட போது எரிபொருள் நிரப்பு நிலைய வளாகத்தினுள் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உடனடியாக மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மீரிகம பகுதியைச் சேர்ந்த 76 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Related posts

உங்கள் PURSE ஐ பின்புற பக்கற்றில் வைப்பவரா நீங்கள் ?ஆபத்து (வீடியோ இணைப்பு)

wpengine

ஹோட்டலில் ஊழியரை தாக்கிய பாலித தெவரபெரும (விடியோ)

wpengine

வடமாகாண கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான கூட்டம் – பா.டெனிஸ்வரன்

wpengine