அரசியல்பிரதான செய்திகள்

எம்.ஏ. சுமந்திரன் பதில் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம் பதவி விலகிய நிலையில் துணைப் பொதுச்செயலாளரான எம்.கே.சுமந்திரன் பதில் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.சிவஞானம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத் உட்பட மத்தியகுழு உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர்.

இதன்போது உயிரிழந்த தமிழரதசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் பதில் தலைவர் தலைமையில் கூட்டம் ஆரம்பமானது.

Related posts

ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷத ராஜபக்ஷவும் அரசியலில்

wpengine

மீண்டும் தேங்காய் விலை உயர்வு? தென்னை மரங்களை வெட்டுவது சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ளது…!!!

Maash

விசித்திரமான காதல் ஜோடி (படங்கள்)

wpengine