எம்.எச்.முஹம்மத் மறைவுக்கு மாகொல முஸ்லிம் அநாதை இல்லத்தின் பழைய மாணவர் சங்கத்தின் அனுதாபச் செய்தி

அநாதைகளின் வாழ்வில் ஒளியேற்ற தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தவர்களில் அமைச்சர் எம்.எச்.முஹம்மத் அவர்கள் மிக முக்கியமானவர். அவர் மாகொல முஸ்லிம் அநாதை இல்லத்தின் வளர்ச்சிக்காகப் பங்கேற்றுழைத்தவர்.

அநாதைகளின் சுபிட்சத்திற்காக அவர் ஆற்றிய பங்களிப்பினைக் கௌவிக்கும் முகமாக மாகொல முஸ்லிம் அநாதை இல்லத்தின் பழைய மாணவர் சங்கம் காதிமுல் அய்த்தாம் என்ற விருதினை அவருக்கு வாழும் காலத்திலேயே அளித்துக் கௌரவப்படுத்தியது.

அன்னாரின் இழப்பு எமது உள்ளங்களில் ஏற்படுத்திய அதிர்வுகளை அவ்வளவு எளிதில் ஆற்றுப்படுத்த முடியாது. அநாதைகளின் சுபிட்சத்திற்காக தனது வாழ்வின் பெரும் பகுதியை அர்ப்பனித்த அவரது மறுவுலக வெற்றிக்காக நாம் பிரார்த்திக்கின்றோம் அத்துடன் அவரின் இழப்பினால் துயர் அடைந்திருக்கும் குடும்பத்தவர்கள் துன்பத்தில் அவரின் பிள்ளைகளாகப் பங்கெடுக்கின்றோம். 

7f3ae839-39e3-4a50-9685-bad7fde7518d

மாகொல முஸ்லிம் அநாதை இல்லத்தின் மாணவர்கள் மற்றும் நிருவாக அங்கத்தவர்கள் சார்பில் பழைய மாணவர் சங்கம் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.
தலைவர் : ஏ.எஸ். இல்யாஸ் பாபு
பொதுச் செயலாளர் : செய்ஹ்இஸ்மாயீல் முஸ்டீன்

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares