பிரதான செய்திகள்

எம்.எச்.முஹம்மதின் மறைவு நாட்டு மக்களுக்கு பாரிய இழப்பாகும் அமைச்சர் றிசாத்

முன்னாள் சபாநாயகர் எம்.எச்.முஹம்மத், ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த உறுப்பினர். கட்சியில் நெருக்கடி ஏற்பட்டபோதெல்லாம் அவர் கை கொடுத்து உதவியவர். அக்கட்சியின் முன்னாள் தலைவர்களுடன் மிக நெருக்கமாக செயற்பட்டு, அக்கட்சியை வழி நடத்தியவர். பல்வேறு அமைச்சுப் பொறுப்புக்களில் கடந்த காலங்களில் பணியாற்றி, மக்கள் நன்மதிப்பைப்  பெற்றவர். இன, மத பேதமின்றி உழைத்தவர். சிங்கள, முஸ்லிம் நல்லுறவுக்காக, அந்த சமூகத்தின் பிரமுகர்களுடன் இணைந்து பணியாற்றியவர்.

முஸ்லிம் சமூகத்துக்கு அவர் நேரிய வழியைக் காட்டினார். வடபுல முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்டபோது, மனம் நொந்துபோன பெரியார் முஹம்மத், அவசர அவசரமாக கொழும்பு, கலதாரி  ஹோட்டலில் மாநாடைக் கூட்டினார். முஸ்லிம் அரசியல்வாதிகள், பரோபகாரிகள், முஸ்லிம் சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஆகியவர்களை அழைத்து, வடபுல முஸ்லிம் சமூகத்துக்கு நேர்ந்த கதியை விளக்கினார். அவர்களுக்கு அவசர உதவிகள் வழங்குமாறு உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். இந்த சந்தர்ப்பத்தில் அவரது அரிய சேவையை நினைவு கூறுகின்றோம்.

சவூதி அரேபியாவின் இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி, இலங்கையில் மர்ஹூம் எம்.எச்.முஹம்மதின் வேண்டுகோளை ஏற்று, பல்கலைக்கழகத்தில் பயிலும் முஸ்லிம் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குகின்றது. இந்த வங்கியின் மூலம் வெளிநாடுகளில் முஸ்லிம் மாணவர்கள் உயர்கல்வியைப் பெற்று வருகின்றனர்,

இலங்கையில் மட்டுமன்றி  உலகளாவிய ரீதியில் எம்.எச்.முஹம்மத் பிரபலமானவர். “ராபிததுல் ஆலமீன்” இஸ்லாமிய இயக்கத்தின் உபதலைவராக பணியாற்றி, முஸ்லிம் நாடுகளின் பாராட்டைப் பெற்றவர். அன்னாரின் மறைவு குறித்து நான் ஆழ்ந்த அனுதாபம் தெரிவிக்கின்றேன் என அமைச்சர் றிசாத் தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்தார்

 

(அமைச்சரின் ஊடகப் பிரிவு )  

Related posts

சாணக்கியனின் மக்கள் நலம் சார்ந்த கோரிக்கைக்குடக்ளஸ் உறுதி

wpengine

நிந்தவூர் மதீனா விளையாட்டுக்கழக கபடி அணி வீரர்களுக்கு ரிஷாட் வாழ்த்து

wpengine

100 வயது கொண்டவர்களுக்கு வீட்டு தேடி பணம் வழங்கப்படும்.

wpengine