எமக்காக பேசியவரை விமர்சிக்காதீர்கள்

முகம்மத் இக்பால்

பாராளுமன்ற உறுப்பினர் சாணாக்கியன் அவர்கள் முஸ்லிம் சமூகத்திற்காக பேசினார் என்பதற்காக அவ்வாறு பேசுவதனை விரும்பாத சிலர் சானாக்கியன்மீது இல்லாத குறைகளை தேடி வதந்தி பரப்புகின்றனர்.  

இங்கே ஜனாதிபதியுடன் சாணாக்கியன் இருக்கின்ற புகைப்படமானது கடந்த வரவு செலவு மீதான வாக்கெடுப்பு நாளன்று எடுக்கப்பட்ட படமாகும்.

அன்றைய தினம் வரவு செலவுதிட்ட மீதான வாக்கெடுப்பினை கண்காணிப்பதற்கு ஜனாதிபதி அவர்கள் பாராளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தார்.

பாராளுமனறத்தில் உரை நிகழ்த்தப்படுவதனையும், ஆசனங்களில் உறுப்பினர்கள் நிறைந்து கானப்படுவதனையும் இந்த புகைப்படத்தில் உள்ள திரையில் காணலாம். அதன் பின்பு ஜனாதிபதி அவர்கள் பாராளுமன்றம் வந்ததாக எந்தவித பதிவுமில்லை.

ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு வருகை தந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி அன்றைய தினம் தனது மக்களது தீர்க்கப்படாத பிரச்சினைகள் சம்பந்தமாக பேசியதாக தனது முகநூளில் அப்போதே பதிவிட்டிருந்தார்.

ஆனால் அரசாங்கத்தை விமர்சித்துவிட்டு அதன் பின்பு ஜனாதிபதியை சந்தித்ததாகவும், சாணாக்கியன் இரட்டை வேடம் போடுவதாகவும் கதை கட்டுவது ஏற்புடையதல்ல.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares