முசலி பிரதேச CTB டிப்போவின் அவல நிலை ! பிரதேச மக்கள் விசனம்

(முசலியூர் கே.சி.எம்.அஸ்ஹர்)

முசலிப்பிரதேசத்திற்கு தனியான இலங்கை போக்குவரத்து சபையின் உப பிராந்திய டிப்போ தேவையாக உள்ளது.இப்பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் போக்குவரத்துப் பிரச்சினைகளுக்கு இது ஒரு நிரந்தர தீர்வாக இருக்கும்.

இடம்பெயர்ந்து புத்தளத்தில்  வசிக்கும் இப்பிரதேச மக்களின் மீள்குடியேற்றத்திற்கும் இது ஒரு உந்து சக்தியாக இருக்கும். முருங்கனில் வந்து இறங்கும் முசலிப்பிரதேச மக்கள்  போக்குவரத்துக்காக மணித்தியாலக் கணக்கில் காத்துக்கிடக்கின்றனர்.

இப்பிரச்சினை வருடக்கணக்கில் தொடர்கிறது சிலாவத்துறை முருங்கன் வீதியிலுள்ள புதுவெளி பகுதி எனும் இடத்தில் டிப்போவூக்காக காணி ஒதுக்கப்பட்டடு பெயர்ப்பலகையூம் போடப்பட்டு கம்பீரமாக காட்சி தருகின்றது.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்  இப்பிரதேசத்தில் இருந்தும் போக்குவரத்துப் பிரதியமைச்சராக எம்.எஸ்.தௌபீக் தற்போது இருந்தும்; இந்த பிரச்சினை பற்றி திரும்பி பார்க்கவில்லை.என பிரதேச மக்கள்  விசனம் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயத்தில் வன்னிப்பிரதேச மக்களிடம் அதிக அக்கறை கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்  அமைச்சருமான  றிசாத் பதீயுதின் போக்குவரத்து அமைச்சருடன் தொடர்பு கொண்டு விரைவாக முசலி டிப்போவைப் பெற்றுத்தர முசலி பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares