பிரதான செய்திகள்

என்னை பார்ப்பதற்கு மிகவும் அக்கரையுடன் வருகின்றார்கள்! நான் வருவேன்

சித்தீக் காரிப்பரின் முகநூலில் இருந்து

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் அவர்களும் நானும் இன்று (25) மாலை 5.00 மணியளவில் தொலைபேசியில் உரையாடிக் கொண்டோம்.

இந்த உரையாடலின்போது ஒரு கட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் கூறிய விடயத்தின் முக்கியத்துவம் என்னால் உணரப்பட்ட நிலையில் இங்கு அதனை வெளிப்படையாக பதிவிடுகிறேன்.

‘ உங்கள் பகுதியைச் சேர்ந்தவர்களும் (அம்பாறை மாவட்டம்) என்னைப் பார்ப்பதற்காக நான் தங்கியுள்ள இடங்களுக்கு எல்லாம் வருகிறார்கள். என்மீது தங்களது அன்பையும் அக்கறையையும் பாசத்தையும் வெளிக்காட்டுகிறார்கள். என்னைப் பார்ப்பதற்காக அவர்கள் எவ்வளவு தூரம் பயணித்து இங்கு வருகிறார்கள். தங்களது பயணத்தின்போது அவர்கள் எவ்வளவோ கஷ்டங்களையும் இடையூறுகளையும் எதிர்கொண்டிருப்பார்கள். அவர்களையும் அங்குள்ள அனைவரையும் சந்திப்பதற்கு நான் விரைவில் அம்பாறை மாவட்டத்துக்குச் செல்லவுள்ளேன்.’ என நெகிழ்ந்த மனதுடன் தெரிவித்தார்.

Related posts

மன்னாரில் பெற்றோல் வழங்கும் விபரம்! சில கிராம சேவையாளர் பிரிவு நீக்கம்.

wpengine

சமூக கடப்பாடுகளின் சமகால நிலைப்பாடுகள்

wpengine

Unlimited இணைய வசதிகள்! Package களுக்கு அனுமதி

wpengine