என்னை அரசியலில் இருந்து ஒழிக்க நினைப்பது வெறும் கானல் நீர்: மகிந்த ராஜபக்ச

ராஜபக்சவினரை அரசியலில் இருந்து இல்லாதொழிப்பது என்பது கானல் நீர் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

என் மீது குற்றங்களை சுமத்தி, என் பிள்ளைகளை சிறையில் தள்ள முயற்சிக்கின்றனர். யோஷித 46 நாட்கள் சிறையில் இருந்தார்.mahinda_group_005

நான் மூன்று மாதங்கள் சிறையில் இருந்தேன் 46 நாட்கள் சிறையில் இருந்ததால் என்னவாயிற்று என்று நான் யோஷித்தவிடம் கூறினேன்.

யோஷித்த அரசியல்வாதி அல்ல என்பதே இங்கு வித்தியாசம். அடுத்தது நாமலை கைது செய்ய உள்ளனர்.mahinda_group_004

நாமல் மூன்று மாதம் அல்ல 6 மாதங்கள் சிறையில் இருந்தாலும் பரவாயில்லை. நான் சிறைக்கு செல்லும் போது நாமலை விட வயது அதிகமாக இருந்து, ஆனால் நாமல் இன்னும் இளைஞன். அவர் சிறையில் இருந்து விட்டு வந்தால் பரவாயில்லை.

இவற்றின் மூலம் என்னை அரசியலில் இருந்து ஒழித்து விடலாம் என்று இவர்கள் நினைத்தால் அது வெறும் கானல் நீர் மாத்திரமே.mahinda_group_003

அப்படி நடக்காது. என்னையும் எனது முழு குடும்பத்தையும் சிறையில் தள்ளினாலும் நாட்டு மக்களுக்காக நான் அரசியலில் ஈடுபடுவேன்.

1939 ஆண்டு முதல் ராஜபக்சவினர் தொடங்கிய இந்த அரசியல் பயணத்தை கைவிட போவதில்லை என்பதை உங்களுக்கு தெளிவாக கூறிக்கொள்கிறேன். அதற்கு இடமளிக்க போவதும் இல்லை என மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.join_opp_meet_01

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares