என்னிடம் வடக்கு- தெற்கு என்ற பாகுபாடு அதிகாரப்பகிர்வை வழங்குவேன்

அரசியல் அமைப்பின் 13வது திருத்த சட்டத்திற்கு அப்பால் ஒருமித்த நாட்டிற்குள் அதிகாரப்பகிர்வை வழங்குவேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.


யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,


“நுண் கடனினால் பாதிக்கப்பட்டுள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு சிறப்பு திட்டமொன்றை அறிமுகம் செய்து அதனூடாக நிவாரணங்கள் வழங்க தீர்மானித்துள்ளேன்.


அதே போன்று வடக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தியுள்ளேன்.
கிராமிய மற்றும் நகர நிர்வாக கட்டமைப்பை உருவாக்கி தனது பிரதேச அபிவிருத்திகளை அந்த மக்களே தீர்மானிக்க கூடிய வகையில் திட்டத்தை உருவாக்குவேன்.


அனைத்து சந்தர்ப்பங்களிலும் 13 அரசியலமைப்பை பாதுகாத்து செயற்படுவேன். ஒருருமித்த நாட்டிற்குள் அதிகாரப்பகிர்வை மையப்படுத்திய மாகாண சபையும் என்னால் பாதுகாக்கப்படும்.


இதனிடையே, படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும். தான் ஆட்சி அமைத்தால் அவ்விடயம் தொடர்பான விசாரணை முழுதளவில் முன்னெடுக்கப்படும்.


ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது, அவர்கள் கொலை செய்யப்படுவது போன்ற செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டால் அது தொடர்பான முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.


இந்த விசாரணைகள் வடக்கு,கிழக்கு மற்றும் தெற்கு என்ற பாகுபாடுகள் இல்லாது உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares