எனது நாடு தயாராக இருக்க வேண்டும் – வடகொரிய ஜனாதிபதி

எந்த நேரத்திலும் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு தமது நாடு தயாராகவிருக்க வேண்டும் என வடகொரிய ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பல ஏவுகணைகள் தொடர்பில், வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிரிகளிடமிருந்து விடுக்கப்படும் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில், அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு தயாராகவிருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

வடகொரியா மீது, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையினால் புதிய தடைகள் விதிக்கப்பட்டுள்ள
நிலையில், இந்த கருத்து வெளியாகியுள்ளது.

அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா மீது தாக்குதல் மேற்கொள்ளப்படும் என வடகொரியா இதற்கு முன்னர் அச்சுறுத்தல் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மணிக்கு சுமார் 150 கிலோமீற்றர் தூரம் பயணிக்கும் வல்லமை கொண்ட புதிய ஆயுத
பரிசோதனைகளை வடகொரியா நேற்று மேற்கொண்டிருந்தது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares