பிரதான செய்திகள்

எனது தனிப்பட்ட அரசியலிலோ ஊழல் மோசடிகளுக்கு அறவே இடமில்லை

ஜனாதிபதி தலைமை வகிக்கும் எனது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலோ அல்லது எனது தனிப்பட்ட அரசியலிலோ ஊழல் மோசடிகளுக்கு அறவே இடமில்லை, ஊழலற்ற அபிவிருத்தியே எமது குறிக்கோள் என நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

எமது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி எமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதுதான் எமது இலக்காகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் நேற்றைய தினம், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்த உள்ளூராட்சித் தேர்தல் முடிந்த பின் எனது அலுவலகம் 24 மணித்தியாலமும் மக்கள் பணிக்காக திறந்திருக்கும், அங்கே மக்கள் பணிக்காக நியமிக்கப்பட்ட அலுவலர்கள் மக்கள் பணிக்காக காத்திருக்கும் நிலையை உருவாக்குவோம்.

ஆகையால் தேர்தல் நேரங்களில் மாத்திரம் உங்கள் வீட்டுக்கு வரும் அரசியல்வாதிகளையிட்டு நீங்கள் மிகக்கவனமாக இருந்து எமது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மனித நேய செயற்பாட்டாளர் பிளாள் கலீல் ஹாஜியார்.

wpengine

வடக்கு மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமனம்:

wpengine

10 பங்காளி கட்சிகள் தனியாக செயற்பட விமல்,கம்பன்வில நடவடிக்கை

wpengine