எனது ஊகத்தை உறுதி செய்த முதலமைச்சர்

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை)

சில நாட்கள் முன்பு நான் முதலமைச்சரின் முரண்பாடு தொடர்பில் எழுதிய கட்டுரை ஒன்றில் இச் சம்பவம் எவ்வாறு நிகழ்ந்திருக்கலாம் என்பதை ஊகித்து எழுதியிருந்தேன்.சில நான் ஒரு சிறந்த கதையை புனைந்தாதாக கூறி இருந்தனர்.எனது அவ் ஊகத்தை உறுதி செய்யும் வகையில் முதலமைச்சர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ஒரு விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கடற் படை அதிகாரி அவரைத் தடுத்தது மீடியா நபர்களை குறித்த மேடைக்குச் செல்லாது தடுப்பதற்காக இருக்கலாமெனக் கூறியுள்ளார்.

அல் ஹம்துலில்லாஹ் எனது ஊகம் சரியானது.எனது கட்டுரையின் ஊகப் பகுதியை இங்கு இணைக்கின்றேன்.13256198_609062095928253_6545436767756537174_n (1)

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள முதலமைச்சர் ஆளுநர் குறித்த நிகழ்விற்கு குறித்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்களிடம் தனது வருகை பற்றிக் குறிப்பிட்டிருந்தால் இச் சம்பவம் இடம்பெற்றிருக்காது எனக் குறிப்பிட்டுள்ளார்.இங்கு நாம் பெற்றுக்கொள்ளத் தக்க செய்தி அந் நிகழ்விற்கு முதலமைச்சரின் வருவார் என்பதை யாரும் அறிந்திருக்க வில்லை என்பதாகும்.பொதுவாக பாதுகாப்பு படை வீரர்கள் அங்கு வருகை தரும் அதிதிகளை பாதுகாப்பதில் அதிகம் கவனம் செலுத்துவார்கள்.

முதலமைச்சரின் வருகை பற்றி அங்கிருந்தவர்கள் அறியாமல் இருந்தமையால் பாதுகாப்பு படை வீரர்களின் முழுக் கவனமும் அங்கு சமூகம் தந்திருந்த ஏனைய அதிதிகள் மீதிருந்திருக்கும்.இப்படி இருக்கையில் ஆளுநர் முதலமைச்சரை கண்டு மேடைக்கு வருமாறு அழைத்துள்ளார் (கிழக்கு முதலமைச்சரின் மதிப்பு ஆளுநர் கூப்பிட்டு செல்லும் நிலையில் இருப்பது கவலைக்குரிய விடயம்).ஒரு நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது அதிதிகளை நோக்கி யார் சென்றாலும் அவர்களைப் பாதுகாப்பு படை வீரர்கள் குறித்த அதிதிகளைப் பாதுகாக்கும் நோக்கில் தடுப்பது வழமை.கிழக்கு முதலமைச்சர் அதிதிகளை நோக்கிச் செல்லுகையில் முதலமைச்சரின் முகத்தைக் கவனியாது ஏனையவர்கள் போல நினைத்துக்கொண்டு அவரை அந் நேரத்தில் விலக்கிருக்க வாய்ப்புள்ளது.இவர் ஏற்கனவே உலங்கு வானூர்தியில் இடம் கேட்டும் இடம் கிடையாமலும்,ஏனைய அதிதிகள் வருவதற்கு முன் குறித்த இடம் சென்று காத்துக்கொண்டிருந்தமையால் மிகவும் உள வெறுப்புடன் வந்திருப்பார்.இவருக்கு இப்படி விலக்கும் போது வேறு எதனையும் சிந்திக்காது கோபம் வந்திருக்கும்.

இவரின் இக் கூற்றானது குறித்த கடற் படை அதிகாரி பிழை செய்யவில்லை என்பதைத் தெளிவாக்குகிறது.இவர் அக் கடிதத்தில் முற்று முழுதாக ஆளுநர் மீதே பிழையைச் சாட்டியுள்ளார்.இவ் விடயத்தில் ஆளுநர் மீது பிழை என்பதை யாவரும் ஏற்கின்ற போதும் குறித்த கடற் படை அதிகாரிக்கு ஏசியமையே தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள பிரச்சினையாகும்.இக் குறித்த கிழக்கு முதலமைச்சரின் கடிதத்தின் மூலம் கூட குறித்த கடற் படை அதிகாரி மீது எது வித பிழையுமில்லை என்பதே உறுதியாகிறது.இவ்வாறான வார்த்தைகளை ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இணைத்துள்ளமை மிகவும் தவறானதாகும்.அவரே தனது பிழைக்கு எழுத்து மூல ஆதாரத்தை வழங்கியுள்ளார்.மேலும் அவர் தனது அக் கடிதத்தில் குறித்த கடற் படை அதிகாரிக்கு புரோட்டகோல் பற்றி விளங்கப்படுத்தியதாக கூறியுள்ளார்.பிழை ஆளுநர் மீதுள்ள போது குறித்த கடற் படை அதிகாரிக்கு விளங்கப்படுத்த வேண்டிய அவசியமில்லை.அப்படித்தான் விளங்கப்படுத்த வேண்டுமாக இருந்தால் அழகிய முறைகளைக் கையாண்டிருக்கலாம்.

முதலமைச்சர் இவ் விடயத்தை ஏட்டிக்குப் போட்டியாக கையாளாமல் தனது பிழையை ஏற்று சற்று நழுவல் போக்கை கைக் கொள்வது இச் சந்தர்ப்பத்திற்கு பொருத்தமானதாகும்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares