பிரதான செய்திகள்

எனது ஆட்சியில் 4 வீத வட்டியில் கடன் வழங்கப்படும் சஜித்

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியின்போது அனைவருக்கும் 4 வீத குறைந்த வட்டிவீதத்தில் கடன்களை பெற்றுக் கொடுக்கப்போவதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.


பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளவர்களுக்கு இது நிவாரணமாக அமையும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தலைமையில் அண்மையில் ஹோக்கந்துரையில் பிரச்சாரக் கூட்டத்தில் இடம்பெற்றிருந்தது.


இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.


மேலும், தற்போதைய அரசாங்கத்தின் தலைமை நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான அக்கறையின்றி செயற்படுகிறது.


இந்த நிலையில் அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் அபிவிருத்தி செயலணியை நாம் உருவாக்கி வருகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அமைச்சுப் பதவியினை பொறுப்பேற்றுக்கொள்ளவுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்

wpengine

அம்பலாந்தோட்டையில் அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!

Editor

இலவச உம்றா திட்டம் 2ஆம் குழு நாளை பயணம்! அமைச்சர் ஹலீம், ஹிஸ்புல்லாஹ் வழியனுப்பி வைப்பு

wpengine