உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

எகிப்தில் அடுக்குமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து 10 பேர் பலி.!

எகிப்து நாட்டின் கிசா மாகாணம் கெர்டாசா நகரில்  இன்று காலை அடுக்குமாடிக் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்ததோடு  3 பேர் படுகாயமடைந்தனர்.

 குறித்த சம்பவம் தொடர்பாக  தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். படுகாயமடைந்த 3 பேரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எரிவாயு வெடிப்பு ஏற்பட்டதாலேயே குறித்த அடுக்குமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததாக முதற்கட்ட  தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து  பொலிஸார் மேலதிக விசாரணைகளை  நடத்தி வருகின்றனர்.

Related posts

ஆட்டிடம் அனுமதி பெற்றே பின்னரே ஆட்டுடன் உடலுறவு

wpengine

வட கொரியாவுக்கு ஐ.நா தடை

wpengine

வாட்ஸ் அப்பில் மருத்துவம்! உயிர் பிரிந்த பரிதாபம்

wpengine