ஊரடங்கு சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டம்! கோத்தா

மிக அவசர தேவையை தவிர தனிமைப்படுத்தல் ஊரடங்கு அனுமதி பத்திரம் வழங்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.


நேற்று அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.


ஊரடங்கு சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையாக சட்டத்தை செயற்படுத்துமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.


பொருட்கள் விநியோகத்தின் போது கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு அனைத்து தரப்பின் ஆதரவு அவசியம்.


கொரோனா வைரஸ் பாதிப்புள்ள பகுதிகளில் திருமண நிகழ்வு மற்றும் மத வழிப்பாடு உட்பட மக்கள் ஒன்று கூடுவதனை தவிர்க்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares