ஊடகங்கள் வேட்பாளர்களின் இலக்கங்களை காட்சிப்படுத்த வேண்டாம்

செய்திகள், செய்தி நிகழ்ச்சிகள் அல்லது வேறு நிகழ்ச்சிகளுக்கு இடையில் கட்சிகள், சுயேட்சைக்குழுக்கள் மற்றும் வேட்பாளர்களின் விருப்பு வாக்கு இலக்கங்களை காட்சிப்படுத்த வேண்டாம் என தேர்தல் ஆணைக்குழு, சகல ஊடக நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளது.


செய்திகள், செய்திகள் நிகழ்ச்சி அல்லது வேறு நிகழ்ச்சிகளின் போது இலவசமாகவோ அல்லது கட்டணம் செலுத்தியோ பிரச்சாரங்களை செய்யும் சந்தர்ப்பங்கள் சகல கட்சிகளுக்கோ, வேட்பாளர்களுக்கோ கிடைப்பதில்லை.
இதனால் குறித்த சந்தர்ப்பம் கிடைக்காத தரப்பினர் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவின் கையெழுத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனை தவிர அரசியல் விவாதங்கள், கலந்துரையாடல்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஒரே கட்சியை சேர்ந்த அணியையோ அல்லது தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர்களை மாத்திரமே அழைப்பது சிறந்தது அல்ல என்பது தேர்தல் ஆணைக்குழுவின் நிலைப்பாடாகும்.


பொதுத்தேர்தல் சம்பந்தமான ஊடக வழிக்காட்டல்கள் ஏற்கனவே வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதால், சகல ஊடக நிறுவனங்களும் அதற்கு இசைவாக சுதந்திரம் மற்றும் நீதியான தேர்தலை நடத்த உதவிகளை வழங்கும் என தேர்தல் ஆணைக்குழு எதிர்பார்த்துள்ளது எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares