ஊடகங்களுக்கு ஜனாதிபதியின் அன்பான வேண்டுகோள்

ஒரு தலைப்பட்சமாக அல்லது தீவிரவாதமாக இல்லாமல் அனைவருக்கும் ஊடக வாயில் திறக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இத்துடன் மிகவும் கருணையுடன், கௌரவத்துடன், அன்புடன் இந்த வேண்டுகோளை விடுப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம் ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், செய்தியாளர்கள் ஆகியோருடன் இடம்பெறும் விசேட சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் ஊடக நிறுவனங்கள் சில கடந்த கால ஒழுக்கமற்ற ஆட்சியாளர்களுக்கு சார்பாக நிகழ்ச்சிகளை நடாத்துவது தொடர்பில் தாம் கவலையடைவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த ஆட்சியாளர்கள் காலத்தில் தான் ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்டதுடன், ஊடகவியலாளர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளதையும் ஜனாதிபதி இதன்போது நினைவு கூர்ந்துள்ளார்.

மேலும் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டே ஊடகங்கள் செயற்படவேண்டும் எனவும் ஜனாதிபதி ஊடகங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares