ஊடகங்களின் கவனத்திற்கு! பொலிஸ் ஊடகம் பிரிவு

சில ஊடகங்களில் தவறாக வெளியிடப்பட்டுள்ள செய்தி ஒன்று தொடர்பில் பொலிஸ் ஊடகம் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும் சில ஊடகங்கள் இவ்வாறு தவறாக செய்தி வெளியிட்டுள்ளமையினால் காலி நீதவான் நீதிமன்றிட்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
இதன்படி நேற்றைய தினம் காலி கராப்பிட்டிய வைத்திய பீடத்திற்குள் சுகாதார மாணவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவிருந்த நிலையில்,கராப்பிட்டிய வைத்திய பீடத்தின் பீடாதிபதியினால் பொத்தல பொலிஸாருக்கு தெரிவித்த முறைப்பாட்டிற்கு அமைய காலி நீதவான் நீதிமன்ற நீதிபதியால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

எனினும் குறித்த தடையுத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள சுகாதார மாணவர்கள் என்பது வைத்திய பீட மாணவர்கள் என்று தவறாக ஊடகங்களில் வெளியாகியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே ஊடகங்கள் தவறாக புரிந்துக்கொண்டு செய்திகளை பிரசுரிப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறும் ஊடகங்களிடம் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares