பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

உழவு இயந்திரத்தின் மீது இராணுவம் துப்பாக்கிச் சூடு- யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணம் – கொடிகாமம் பகுதியில்  சட்டவிரோத மணல் ஏற்றி சென்ற உழவு இயந்திரத்தின் மீது இராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். 

இதன்போது குறித்த உழவு இயந்திரத்தில் பயணித்த மூவர் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொடிகாமம் பாலாவி காட்டுப்பகுதியில் இராணுவத்தினர் நேற்று (21) மாலை 6.30 மணியளவில் சுற்று  காவல் பணியில் (ரோந்து) ஈடுபட்டிருந்த போது சட்டவிரோத மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை நிறுத்தியுள்ளனர்.

எனினும், இராணுவத்தினரின் கட்டளையை மீறி உழவு இயந்திரம்  தப்பிச் செல்ல முற்பட்ட வேளை வாகனத்தின் ரயர்களை இலக்கு வைத்து இராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இராணுவத்தினரின் துப்பாக்கி சூட்டினால் ரயர் காற்று போக, உழவு இயந்திரத்தில் பயணித்த மூவர் வாகனத்தை கைவிட்டு காட்டுக்குள் பாய்ந்து தப்பி சென்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

உழவு இயந்திரத்தை கொடிகாமம் பொலிசார் கைப்பற்றியுள்ளதோடு, தப்பிச் சென்ற மூவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Related posts

பஹ்ரெனில் இலங்கை பெண்ணுக்கு நடந்த கொடுமை

wpengine

உலக தலைவர்களின் ஆதரவை பெறுவது ஒரு வகை கலை என்கிறார் மைத்திரி!

Editor

இராணுவப் புரட்சி தோல்வி ; 754 பேர் கைது

wpengine