பிரதான செய்திகள்

உழல் பட்டியலில் இலங்கை 91வது இடம்

உலகில் ஊழல் மிக்க நாடுகளின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிடும்
Transparency International என்ற அமைப்பு கடந்த ஆண்டுக்கான ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

உலகில் உள்ள நாடுகளில் மொத்தம் 180 நாடுகளில் நடைபெறும் ஊழல்களை அலசி ஆராய்ந்து தரவரிசைப்படுத்தி Transparency International என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.

குறித்த பட்டியல், அரசு வழங்கும் பொதுசேவை மற்றும் அரசு மட்டத்தில் நடைபெறும் ஊழல்கள் அதிகளவில் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், மிக குறைந்த ஊழல் நடக்கும் நாடுகளில் 97ஆவது இடத்தில் இலங்கை காணப்படுகின்றது.

அத்துடன், அவுஸ்திரேலியா உலகில் குறைவான ஊழல் நடக்கும் நாடுகளில் 13 ஆவது இடத்தில் உள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில் அவுஸ்திரேலியா ஒவ்வொரு ஆண்டும் ஊழல் குறைவான நாடுகள் பட்டியலில் சரிந்துவருவதாக இந்த பட்டியல் காட்டுகிறது.

இதன்மூலம், அவுஸ்திரேலியாவில் ஊழல் அதிகரித்துவருவதாக இந்த புள்ளிவிவரம் காட்டுகிறது.

மேலும், மிக குறைந்த ஊழல் நடக்கும் நாடுகளில் முதலிடத்தில் நியூசிலாந்து உள்ளது.

இதனடிப்படையில்,

2 ஆவது இடம்: டென்மார்க்

6 ஆவது இடம்: சிங்கப்பூர்

13 ஆவது இடம்: அவுஸ்திரேலியா

62 ஆவது இடம்: மலேசியா

81 ஆவது இடம்: இந்தியா

91 ஆவது இடம்: இலங்கை

180 ஆவது இடம்: சோமாலியா

போன்ற நாடுகள் முறையே காணப்படுகின்றன.

Related posts

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை நாளை

wpengine

அரச பணியாளர்களுக்கான கட்டாய ஓய்வூதிய வயது 65

wpengine

அத்துமீறிய சிங்கள குடியேற்றம்! சமலின் கவனத்திற்கு கொண்டு வந்த சாணக்கியன்!

wpengine