பிரதான செய்திகள்

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த தயார்! இம்மாத இறுதியில்

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைக்கான காலக்கெடு இம்மாத இறுதியுடன்  முடிவடையும் நிலையில் அறிக்கை கிடைத்தவுடன் உள்ளூராட்சி மன்ற தேர்தலை  நடத்த தயாராக இருப்பதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி  மன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார். எல்லை நிர்ணய ஆணைக்குழு தாமதிக்காது இம் மாத இறுதிக்குள் அறிக்கையை சமர்ப்பிக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,

எல்லை  நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை இம்மாதம் 28 ஆம் திகதிக்குள் நிறைவடைய வேண்டும். அவ்வாறு அவர்களின் அறிக்கை எனது கைகளில் கிடைத்தவுடன் அமைச்சரவை அங்கீகாரத்துக்கு வழங்கி உடனடியாக தேர்தல்கள் ஆணையாளரிடம் ஒப்படைப்பேன். அவர்கள் அறிக்கையை ஒப்படைத்தவுடன்  தேர்தலை அறிவிப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் நான் முன்னெடுக்க தயாராக உள்ளேன் என்றார்.

Related posts

2023 பாடசாலைகளில் 1ம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்!

Editor

சம்பள பிரச்சினை! அரச நிறுவனங்களுக்கு பாரிய பிரச்சினை

wpengine

கொரோனா அரச ஊழியர்கள் தொடர்பில் புதிய நடைமுறை

wpengine