பிரதான செய்திகள்

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஏமாந்துபோன பெண்கள் 10 வீதம் தெரிவு

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் 10 வீதமான பெண்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கடந்த 2012ம் ஆண்டில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் 1.9 வீதமான பெண்களே தெரிவாகியிருந்தனர்.

எனினும், இம்முறைத் தேர்தலில் தொகுதிவாரியாக தெரிவான பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை சுமார் பத்து வீதம் வரையில் உயர்வடைந்துள்ளது.

தொகுதிவாரி அடிப்படையில் மொத்தமாக 5092 பேர் தெரிவாகியுள்ளதுடன் இதில் 535 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 54 பெண் உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர்.

தொகுதிவாரி அடிப்படையில் பெண் உறுப்பினர்கள் தெரிவாகியுள்ள நிலையில் விகிசாதார முறையிலும் பெண் உறுப்பினர்களை தெரிவு செய்து, உள்ளுராட்சி மன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 25 வீதமாக பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தேர்தல் சட்டத்தில் விதந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வடக்கு மாகாண சபையின் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்

wpengine

ஓட்டமாவடி சிராஜிய்யா அரபுக் கல்லூரியினை பார்வையீட்ட ஷிப்லி பாறுக்

wpengine

புத்தாண்டிலிருந்து புதிய இடத்தில் ஜனாதிபதி நிதியம் – SriLakan President Anurakumara DIssanayaka

Editor