Breaking
Mon. Nov 11th, 2024

பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள பிரதேச சபைகள், நகர, மாநகர சபைகள் மற்றும் மாகாண சபைகள் தொடர்பான திருத்தச் சட்டமூலம் அரசியல்யாப்புக்கு முரணானது என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

உச்சநீதிமன்றின் இந்த வியாக்கியானத்தை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றில் வைத்து அறிவித்தார்.

குறித்த திருத்தங்களை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றில் விசேட பெரும்பான்மை அல்லது பொதுசன வாக்கெடுப்பு அவசியம் என்றும் உயர் நீதிமன்றின் வியாக்கியனத்தில் சொல்லப்பட்டுள்ளது.

இந்த திருத்தச் சட்டமூலத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

A B

By A B

Related Post