பிரதான செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதியை அறிவிக்கும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதியை அறிவிக்கும் அதிகாரம் எதிர்காலத்தில் தமது ஆணைக்குழுவுக்கு வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட நிமல் ஜி. புஞ்சிஹேவா இதனைத் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் ஒரு வருடத்தினால் நீடிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த பதவிக்காலம் அடுத்த வருடம் மார்ச் மாதம் 25 ஆம் திகதியுடன் நிறைவடைவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி, செப்டம்பர் 20 ஆம் திகதிக்குப் பிறகு தேர்தல் திகதியை அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

24 கடற்கரையோரப் பிரதேசங்!களில் முதலீடு செய்ய வாய்ப்பு!

Editor

அனைத்து தேர்தல்களும் தாமரை மொட்டுச் சின்னத்தில்

wpengine

34 கோடிக்கு ஆடம்பர வீடு வாங்கிய கோலி

wpengine