எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக இதுவரை கட்டுப்பணம் செலுத்திய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் குறித்து தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த 3 ஆம் திகதி ஆரம்பித்து கட்டுப்பணம் ஏற்றுக்கொள்ளும் நடைமுறையின்படி, நேற்று (06) மாலை 4.15 மணி வரை 88 உள்ளூராட்சி அதிகார சபைகள் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, அந்த 88 உள்ளூராட்சி அதிகார சபைக்கான 10 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் 38 சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு குறித்த அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
