பிரதான செய்திகள்

உள்ளுராட்சி மன்ற தேர்தல் நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக தீர்மானம் ஒத்திவைப்பு

தேர்தலுக்கான புதிய திகதி தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.  

இதன்படி,  தேர்தலுக்கான திகதி குறித்த அறிவிப்பு அடுத்த வாரத்தின் முதல் சில நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  

தேர்தலை நடத்துவதற்கான திகதியை தீர்மானிக்கும் வகையில் தேர்தல்கள் ஆணைக்குழு இன்றையதினம் கூடயிருந்தது.

எனினும், நிதியமைச்சர் மற்றும் அதன் செயலாளருக்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு காரணமாக, திகதி நிர்ணயம் செய்வது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

நிதியமைச்சின் செயலாளர், அரச அச்சகமா அதிபர், பொலிஸ் திணைக்களம் உள்ளிட்ட ஏனைய தொடர்புடைய தரப்பினருடன் கலந்துரையாடி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

Related posts

2ஆம் திகதி வேட்பாளர்களை கொழும்புக்கு அழைக்கும் மஹிந்த

wpengine

தேசிய விளையாட்டு விழா இந்த ஆண்டு யாழ்ப்பாணத்தில்

wpengine

இதோ சந்தர்ப்பம் கல்வி டிப்ளோமா பாட நெறி

wpengine