பிரதான செய்திகள்

உலக வன ஜீவ ராசிகள் தினம் 5ஆம் திகதி உடவலையில் அனுஸ்டிப்பு

(அஷ்ரப் ஏ சமது)
உலக வன வள, ஜீவராசிகள் தினம் கடந்த 5ஆம் திகதி உடவலவையில் வன ஜீவ ராசிகள் சம்பந்தமான பிரதியமைச்சா்  திருமதி சுமேதா பீ. ஜயசேன  தலைமையி்ல் கொண்டாடப்பட்டது.

இந் நிகழ்வில் பாடசாலை மாணவா்கள் காடுகளையும் வன வளங்கள் காட்டு மிருகங்களையும் பாதுகாப்போம் என்ற தொணிப் பொருளில் பாடாசலை மாணவா்கள் நடை பவணி இடம் பெற்றது. அத்துடன் மாணவா்களுக்கிடையே நடை பெற்ற போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பிரதியமைச்சாினால் பரிசுகள் சான்றிதழ்கள் வழங்க்பபட்டன.12fe8e36-9bea-465c-98df-906e5d60ea56
இங்கு உரையாற்றிய பிரதியமைச்சா்  இலங்கையில் யாணை- மனிதன் போரட்டம் நடைபெற்று வருகின்றது. நாளாந்தம் சனத் தொகை அதிகரிக்க அதிகாரிக்க மணிதன் மிருகங்கள் வாழும் வனத்தை அழித்த வீடுகளையும் வனங்களையும் அழித்து வருகின்றான். அத்துடன் காடழிப்பினால் மிருகங்கள் மனித குடியிருப்புக்களிழ் புகுந்து மணிதா்களை அழித்து வருகின்றது.  எமது நாட்டில் 30 வீதமாக மிஞ்சியிருக்கின்ற காட்டையாவது நாம் பாதுகாக்க வேண்டும்.c1bd9186-2cc4-450f-ace4-d12570f5821d
அடுத்த தலைமுறையினா் காலநிலை மற்றும் இயற்கை மாற்றத்திற்கு நின்றுபிடிப்பதற்கு இந்த வன வளத்தை நாம் முறையற்ற அபிவிருத்திகள், வீடுகள் கட்டிடங்கள் நிர்மாணிக்காமல் பாதுகாப்பது தலையாய கடமையாகும். அல்லது நாம் சுவாசிக்கும் காபணிரொட்சைட் கூட வெளிநாட்டில் விளைகொடுத்து வாங்க வேண்டிய நிலைமைக்கு ஆளாக்கப்பட்டு விடுவோம் என பிரதியமைச்சா் அங்கு உரையாற்றினாா். இந் நிகழ்வில் அமைச்சின் செயலாளா் மீகஸ்முல்ல, வன ஜீவராசிகள் திணைக்களப் பணிப்பாளரும் கலந்து சிறப்பித்தனா்.

Related posts

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம்

wpengine

20 ஐ ஆதரித்தமைக்கான பலன்கள் விரைவில் சமூகத்தை வந்தடையும் !மு.கா.

wpengine

இன்று முதல் அத்தியாவசிய பொருட்கள் விற்பனையில்

wpengine