உலக சாதனை படைத்த 6 மாத குழந்தை (வீடியோ)

அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியான புளோரிடாவில் 6 மாத பெண் குழந்தை ஒன்று நீர் சறுக்கு விளையாட்டில் உலக சாதனை படைத்துள்ளது. விளையாட்டு என்ற பெயரில் 6 மாத குழந்தையை தண்ணீரில் வைத்து சறுக்கு விளையாட வைத்தது பார்ப்போரை அதிர்ச்சியடைய செய்தது.

சியாலா என்ற அந்த பெண் குழந்தை நடக்க முடியாத போதிலும் ஏரியின் குறுக்கே நீர் சறுக்கு பலகையை பிடித்தவாறு 209 மீட்டர் பயணம் செய்து அனைவரையும் வியக்க வைத்தது. தொழில்முறை நீர் சறுக்கு வீரர்களான அந்த குழந்தையின் பெற்றோர், “படகு ஏரியின் மறுமுனையில் நின்று விட்டது. அப்படி இல்லாவிட்டால் இன்னும் அதிக தூரத்தை சியாலா கடந்திருப்பாள்” என்று பெருமையுடன் கூறியுள்ளனர்.

பார்க்ஸ் போனிபை என்பவர் 6 மாதம் 29 நாட்கள் வயதில் நீர் சறுக்கில் ஈடுபட்டதே சாதனையாக இருந்தது. அதனை 6 மாதம் 27 நாட்களில் அதாவது 48 மணி நேர வித்தியாசத்தில் முறியடித்து விட்டார் சியாலா.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares