பிரதான செய்திகள்

உலக உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தினால் 8300 மெட்ரிக் டொன் யூரியா நன்கொடை!

8300 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை இலங்கைக்கு நன்கொடையாக வழங்க உலக உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம் தீர்மானித்துள்ளது.

இந்த யூரியா உரத்தொகையானது, பெரும்போகத்தில் ஒரு ஹெக்டேயருக்கும் குறைவாக பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் குருணாகல் மாவட்டத்திலும் உள்ள விவசாயிகளுக்கு இந்த நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக உலக உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்த செயற்றிட்டத்திற்கு ஜப்பான் அரசாங்கம் நிதியுதவி வழங்கவுள்ளது.

இதுவரை பல்வேறு சந்தர்ப்பங்களில் நாட்டின் விவசாயிகளுக்கு 15000 மெட்ரிக் தொன் வரையான யூரியா உரம், உலக உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தினால் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

Related posts

பி.சி.ஆர் பரிசோதனைகள் மரணங்கள் தொடர்பில் புதிய நடைமுறை

wpengine

எனது பொலிஸ் வேலையை தாருங்கள்-கண்கலங்கும் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்

wpengine

15 வயது குழந்தைக்கு எய்ட்ஸ், குழந்தைகள் பாடசாலை அல்ல மேலதீக வகுப்புக்கு என்று காட்டிக்கு செல்கின்றது.

Maash