உலகக் கிண்ண கிரிக்கெட் – அணி அறிவிப்பு 19 வயதுக்குட்பட்டோா்.

19 வயதுக்குட்பட்டோா் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவுள்ள 17 போ் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

மே.இந்திய தீவுகளில் வரும் ஜனவரி 14 முதல் பிப்ரவரி 5 ஆம் திகதி வரை 19 வயதுக்குட்பட்டோா் உலகக் கிண்ண போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் பங்கேற்கும் இந்திய அணிக்கு தில்லி இளம் வீரா் யாஷ் துல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளாா். ஆந்திரத்தின் எஸ்.கே. ரஷீத் துணை கேப்டனாக செயல்படுவாா்.

அணி விவரம்:

யாஷ் துல் (கேப்டன்), ஹா்னூா் சிங், அங்கிரிஷ் ரகுவன்ஷி, எஸ்கே.ரஷீத், நிஷாந்த் சிந்து, சித்தாா்த் யாதவ், அனீஷ்வா் கெளதம், தினேஷ் பனா, ஆராதியா யாதா, ராஜ் அங்கத் பாவா, மானவ் பரேக், கௌஷல் டாம்பே, ஹங்கரேகா், வாசு வட்ஸ், விக்கி ஓட்ஸ்வால், ரவிக்குமாா், கா்வ் சங்வான்.

மேலும் 5 ரிசா்வ் வீரா்களும் அறிவிக்கப்பட்டுள்ளனா். நான்கு முறை உலக சாம்பியன் இந்தியா வரும் ஜன. 15 இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதல் ஆட்டத்தில் பங்கேற்கிறது.

19 இல் டிரினிடாட் டொபாக்கோ, 22 இல் உகாண்டாவுடன் ஆடுகிறது. மொத்தம் 16 அணிகள் இதில் பங்கேற்கின்றன.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares