பிரதான செய்திகள்

உரும்பிராய் யோகபுரம் அறநெறிப் பாடசாலையின் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் வைபவம்-சித்தார்த்தன்

யாழ் உரும்பிராய் யோகபுரம் ஆதி பராசக்தி அம்பாள் ஆலயத்திற்கு அருகிலுள்ள முன்பள்ளியில் அறநெறிப் பாடசாலை வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மேற்படி அறநெறி பாடசாலையினை நடாத்துவதற்கு ஒரு புதிய கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டிவைக்கும் வைபவம் நேற்று காலை (04.03.2017) நடைபெற்றது.

லண்டன் ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலய நம்பிக்கை நிதியத்தினாலும், உரும்பிராயைச் சேர்ந்த லண்டனில் வாழுகின்ற அபிமானிகளாலும் மேற்படி அறநெறி பாடசாலைக் கட்டிடத்தை அமைப்பதற்கான நிதிப் பங்களிப்பு செய்யப்படவிருக்கின்றது. 
இக்கிராமத்து மக்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்கின்றார்கள். இந்த மக்களுக்குத் தேவையான அபிவிருத்திகள் மற்றும் கல்வி வசதிகளை செய்து கொடுப்பதிலும் லண்டன் ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலய நம்பிக்கை நிதியத்தினரும், உரும்பிராயைச் சேர்ந்த லண்டன் வாழ் அபிமானிகளும் முன்நிற்கின்றார்கள். 
லண்டன் ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலய நம்பிக்கை நிதியத் தலைவர் ஆர்.டீ ரட்ணசிங்கம், புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் ஆலய நிர்வாகிகளின் பங்குபற்றுதலுடன் மேற்படி அறிநெறி பாடசாலைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது. 

Related posts

மன்னார் நகர பிரதேச செயலகத்தின் சிறுவர் தின போட்டிகள் (படம்)

wpengine

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஒதுங்கி விட அனுரகுமார திஸாநாயக்க சீற்றம்

wpengine

20 வயது கனேடிய மாணவி, 175 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருளுடன்.

Maash