பிரதான செய்திகள்

உரிய நேரத்தில் குறிப்பிட்ட அமைச்சு என்னால் செய்யப்படும் விக்னேஸ்வரன்

வடமாகாண விவசாய அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோர் பதவியை இராஜினாமா செய்திருக்கும் நிலையில் புதிய அமைச்சர்கள் தெரிவு செய்யப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய மாகாண கல்வி அமைச்சராக ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரனையும் ஏனைய அமைச்சராக அனந்தி சசிதரனும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

நாளை காலை 10 மணியளவில் ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்யவுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பொ.ஐங்கரநேசனிடம் இருந்த விவசாயம், கால்நடை அபிவிருத்தி மற்றும் கூட்டுறவு ஆகிய அமைச்சு பொறுப்புக்களை முதலமைச்சர் தானே பொறுப்பேற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விக்னேஸ்வரனிடம் இருந்த பெண்கள் விவகாரம் மற்றும் புனர்வாழ்வு, உள்ளிட்ட சில துறைகளை அனந்தி சசிதரனிடம் வழங்கி புதிய அமைச்சு துறை ஒன்றை உருவாக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புதிய அமைச்சர்களை நியமிப்பது தொடர்பாக முடிவெடுக்கப்படவில்லை என்றும் செயல் நடவடிக்கைகளுக்கும் அமைவாக உரிய நேரத்தில் குறிப்பிட்ட நியமனங்கள் என்னால் செய்யப்படும் என்றும் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.

இருப்பினும் இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் இம்மானுவேல் ஆனோல்டைபரிந்துரைத்திருந்த நிலையிலேயே தற்போது இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் இது வரையில் வெளிவந்துள்ள தகவல்களை முழுமையாக உறுதிப்படுத்த முடியாதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதி பதவி விலக வேண்டும் முஜிபுர் ரஹ்மான்

wpengine

கல்முனையை சேர்ந்தவரை முன்னிறுத்தி கிழக்கில்தான் முஸ்லிம் காங்கிரசின் தலைமைத்துவம் அமைய வேண்டும்

wpengine

பேஸ்புக் பார்ப்பதும் இல்லை! தொடர்ந்து பார்ப்பதால் ஒரு பயனும் இல்லை -ஜனாதிபதி

wpengine