பிரதான செய்திகள்

உயர் நீதிமன்றில் சுமார் 17 மனுக்கள் தாக்கல் நாளை விசாரணை

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணைகள் நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி நாடாளுமன்றை கலைத்திருந்தார்.

ஜனாதிபதியின் இந்த செயலுக்கு எதிராக உயர் நீதிமன்றில் சுமார் 17 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையில் பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன ஆகிய நீதியரசர்களை கொண்ட குழு முன்னிலையில், இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

நீண்ட வாதப்பிரதிவாதங்கள் நடந்த பின்னர் இது தொடர்பில் மேலும் கால அவகாசம் தேவையென சட்ட மா அதிபர் தெரிவித்ததையடுத்து மனுக்கள் மீதான விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், குறித்த மனுக்கள் மீதான விசாரணைகள் நாளை தொடரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கைதிகளின் விடுதலை அரசாங்கம் ஆக்கபூர்வமான செயற்பாட்டை மேற்கொள்ளவில்லை

wpengine

மலையகத்தில் மரக்கறிகளின் விலைகள் உயர்வு!

Editor

அமைச்சர் விஜயதாஸ ராஜபஷ்சவினை நீக்கிய ஜனாதிபதி

wpengine