பிரதான செய்திகள்

உயர் தர பரீட்டைசையில் விரக்தி! தூக்கில் தொங்கிய வவுனியா மாணவன்

வவுனியா, கூமாங்குளத்தில் இன்று  காலை 9.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா கூமாங்குளத்தில் வசித்துவரும் 20 வயதுடைய பாஸ்கரன் விதூசன்  என்ற இளைஞன் கடந்த ஆண்டு க.பொ.த உயர்தர விஞ்ஞான பிரிவில் பரீட்சை எழுதியிருந்தார். தகுதி காணாமையால் இந்த ஆண்டும் உயர்தர பரீட்சை எழுதிவிட்டு வீட்டிலேயே இருந்துள்ளார்.

தாயார் கடைக்கு சென்று வீடு திரும்பிய போது  வீட்டின் அறையினுள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன்  இந்த முறை எவ்வாறு பெறுபேறு வருகிறதோ என பெற்றோரிடம் அடிக்கடி கவலையுணர்வுடன் கதைத்ததாக பெற்றோர் கூறுகின்றனர்.

தற்போது குறித்த இளைஞனின்  சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

2024ம் ஆண்டின் 1ம் தவணை கல்வி நடவடிக்கை பெப்ரவரி 21 இல்!

Editor

அரச ஊழியர்கள் ஏற்கனவே உள்ள கையெழுத்துக்களை பயன்படுத்துவதற்கு அனுமதி கோரிக்கை

wpengine

ஜூன் மாதம் 1ஆம் திகதி புதிய இராணுவத் தளபதி

wpengine