பிரதான செய்திகள்

உயர்தரப் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதி அமைச்சர் அமீர் அலி

(அனா)
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் சிறந்த பெறுபேற்றை பெற வேண்டுமென இறைவனை பிராத்திப்பதாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளருமாகிய எம்.எஸ்.எஸ்.அமீர் அலி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவிததுள்ளார்.

நடைபெறவுள்ள கல்விப் கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் தமது அறிவு மட்டத்தை மேலோங்கும் வகையில் சிறந்த முறையில் பரீட்சைகளின் கவனம் செலுத்த வேண்டும்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மாணவர்களின் கல்வி அடைவு மட்டத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறுபட்ட வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வரும் நிலையில் மாணவர்களும் தங்களுடைய அடைவு மட்டத்தை அதிகரிக்க திறமையாக செயற்பட வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் எமது மாவட்டத்தின் பெருமை இலங்கை முழுவதும் வெற்றி நடைபோடும் வகையில் பரீட்சையில் கவனம் செலுத்த வேண்டும்.

எனவே தாங்கள் எவ்வித இடையூறும் இன்றி சிறந்த முறையில் பரீட்சையில் தோற்றி சிறந்த பெறுபேற்றை பெற்று மாவட்டத்திற்கு பெறுமை சேர்க்க எல்லாம் வல்ல இறைவணைப் பிராத்திப்பதாக தெரிவித்துள்ளார்..

Related posts

வாக்குத் தவறாத நாக்கு

wpengine

வவுனியாவில் சுற்றிவளைக்கப்பட்ட வைத்தியசாலை

wpengine

முன்னாள் ஜனாதிபதி அவர்களின் இல்லத்தில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு !

wpengine