பிரதான செய்திகள்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம்- திணைக்களம்

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரத்திற்குள் வௌியிடப்படும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சை பெறுபேறுகளை தயார்ப்படுத்தும் நடவடிக்கைகள் நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ளதாக
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ.பூஜித்த தெரிவித்தார்.

இதனிடையே, கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்ற கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை 23 நிலையங்களில் மதிப்பீட்டு நடவடிக்கைள் இடம்பெறவுள்ளன.

4,620 ஆசிரியர்கள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை நடைபெற்றது.

Related posts

வீதி சட்டத்தை மீறிய தந்தை : பொலிஸில் முறைப்பாடு செய்த சிறுவன்

wpengine

மன்னாரில் வாக்கு எண்ணும் ஒத்திகை

wpengine

Update அதிகாலை யானை தாக்குதல் மீண்டும் ஒரு சிறுமி மரணம்

wpengine