அறிவித்தல்கள்செய்திகள்பிரதான செய்திகள்

உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்திய மாணவர்கள் கௌரவிப்பு நாலை.

2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்திய மாணவர்களை அங்கீகரிக்கும் திட்டம் ஜனாதிபதி நிதியத்தால் செயற்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 60 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு, அவர்களுக்கு நிதி உதவித்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

மாகாண ரீதியில் செயற்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் முதல் நிகழ்ச்சித்திட்டம் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நாளை கிளிநொச்சியில் நடைபெறும்.

மேலும் 2023 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் அங்கு அங்கீகரிக்கப்படுவார்கள்.

எதிர்காலத்தில் ஏனைய மாவட்டங்களிலும் இதே போன்ற திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களை அங்கீகரிக்க ஜனாதிபதி நிதியம் ஏற்பாடு செய்துள்ளது.

Related posts

சம்மாந்துறை பஸ் டிப்போவை இடமாற்றுவதை கைவிட்டு தரமுயர்த்துவதில் கவனஞ்செலுத்துங்கள்’ – போக்குவரத்து அமைச்சர்களிடம் ரிஷாட் கோரிக்கை

wpengine

வாக்களிக்க முயற்சிக்குமாறு வாக்காளர்களிடம் கோரிக்கை

wpengine

இருசாராரும் சேர்ந்து பேசி தீர்த்துக் கொள்ளக் கூடிய பொறிமுறையை ஏற்படுத்தவேண்டும்-விக்கினேஸ்வரன்

wpengine