செய்திகள்பிரதான செய்திகள்

உப்பிற்கான புதிய விலைகள் அறிவிப்பு!

உப்பின் விலையை குறைத்து, அதிகபட்ச சில்லறை விலையில் உப்பை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கம் அண்மையில் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தியதைத் தொடர்ந்து, போதுமான அளவு உப்பு கையிருப்பில் உள்ளது என்றும், இறக்குமதி செய்யப்பட்ட உப்பை உடனடியாக விற்பனை செய்ய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கல் உப்பு 1 கிலோ ரூ. 180

தூள் உப்பு 1 கிலோ ரூ. 240

தூள் உப்பு 400 கிராம் ரூ. 120

மேற்படி விலையில் பொதி செய்யப்பட்ட உப்பை நாடு முழுவதும் விநியோகிக்க பல நாட்கள் ஆகலாம் என்றும், அதன் பிறகு நுகர்வோர் நாடு முழுவதும் மேற்படி விலையில் பொதி செய்யப்பட்ட உப்பை வாங்க வாய்ப்பு கிடைக்கும் என்றும் இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

9 வருடங்களில் 3,477 காட்டு யானைகள் மரணம்.!

Maash

அல்லாஹ்வுக்கு 99 பெயர்கள் – மோடி தீடிர் விளக்கம் (விடியோ)

wpengine

றிசாத் பதியுதீன் பௌண்டேசனினால் மாணவர்களுக்கு கௌரவம் வழங்கும் நிகழ்வும் கற்றல் உபகரணம் வழங்கலும்

wpengine