பிரதான செய்திகள்

உதிரிபாகங்கள் இன்றி பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள்!

இயந்திரம் மற்றும் உதிரி பாகங்கள் இல்லாத காரணத்தால், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான 5 விமானங்கள் பல மாதங்களாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த பயன்படுத்தப்படாத விமானங்களில் பெரும்பாலானவை 2017க்குப் பிறகு பாவனையில் ஈடுபடுத்தப்பட்ட A320 NEO மற்றும் w321 NEO ரக விமானங்கள் என்று அவர் குறிப்பிடுகிறார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் 24 எயார்பஸ் விமானங்கள் உள்ளதாகவும், அவற்றில் A 330-200 மற்றும் A 330-300 ரகத்தைச் சேர்ந்த 12 விமானங்கள் நீண்ட தூரப் பயணங்களுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மற்றைய 12 விமானங்கள் குறுகிய தூர பயணங்களுக்கு பயன்படுத்தப்படும் என்றும், A320, A321, A320, A321 NEO மற்றும் W321NEO வகையைச் சேர்ந்த விமானங்களே குறுந்தூர பயணங்களுக்கு பயன்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். மேலும், 150 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய A320 NEO ரக விமானங்கள் இரண்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

188 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய W321 NEO ரகத்தைச் சேர்ந்த 4 விமானங்கள் உள்ளதாகவும், அவற்றில் தற்போது 3 விமானங்கள் உதிரி பாகங்கள் இல்லாததால் நிறுத்த வைக்கப்பட்டுள்ளதாகவும்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்கள் உதிரி பாகங்களின்றி நிறுத்தப்படுவதால் விமான சேவைக்கு பாரிய நஷ்டம் ஏற்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

முஸ்லிம் சமூகத்திற்கான ஒரே ஒரு ஊடகமாக இருந்த UTV இற்கு நடந்தது என்ன? பசிலுக்கு விற்கப்பட்டதா ? UTV இழுத்து மூடப்பட்டதா?

wpengine

அமைச்சர் றிசாத்தை சந்தித்த மலேசிய வர்த்தக குழுவினர்

wpengine

வெள்ளத்தில் நிற்கும் யுவதிக்கு பேஸ்புக் காய்ச்சல் (படம்)

wpengine