பிரதான செய்திகள்

உதிரம் கொடுத்து உயிர் காப்போம் கல்முனையில் இரத்த தானம்

சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இரத்த தான நிகழ்வு கல்முனை வடக்கு வைத்திய சாலையில் இடம்பெறவுள்ளது.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் கலாபூசணம் மீரா இஸ்ஸதீன் மற்றும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் ஆகியோரின் தலைமையில் இந்த இரத்த தான நிகழ்வு இடம் பெறவுள்ளது.

எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (08) காலை 9.00 மணிக்கு வைத்தியசாலையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வு அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் பிரதி தலைவரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான கலாபூசணம் ஏ.எல்.எம் .சலீம் மற்றும் கல்முனை வடக்கு வைத்தியசாலை இரத்த வங்கி பொறுப்பதிகாரி டாக்டர். எஸ்.ரமேஷ் ஆகியோரின் நெறிப்படுத்தலில் நடை பெறவுள்ளன .1111 (1)

இரத்ததான நிகழ்வில் சம்மேளனத்தின் உறுப்பினர்கள் பலரும் மற்றும் கல்முனை பொலிசாரும் , இராணுவத்தினரும் , கடற்படையினரும் இணைந்து கொண்டு மனிதாபிமான ரீதியில் இரத்தக் கொடை வழங்கவுள்ளனர்.

உதிரம் கொடுத்து உயிர்காப்போம் என்ற தொனிப் பொருளில் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளம் ஏற்பாடு செய்துள்ள இந்த குருதிக் கொடை வழங்கல் நிகழ்வில் கலந்து கொண்டு இரத்தக் கொடை செய்ய விரும்பும் கொடையாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் எஸ்.எல்.ஏ.அஸீஸ் (0772981214), பொருளாளர் யு.எம்.இஸ்ஹாக்(0772985035) ஆகியோருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளனர்.

Related posts

வவுனியா பாடசாலை மாணவியின் புதிய கண்டுபிடிப்பு

wpengine

ரஷ்யாவுக்கு இனிமேல் Visa Card இன்னும் ஏனைய வசதிகள் இல்லை அதிரடி நடவடிக்கை

wpengine

22 வயதுடைய யுவதி துஸ்பிரயோகம் – 17 வயது மாணவன் கைது!

Editor