பிரதான செய்திகள்

உடுவே தம்மாலோக்க தேரரை கைது செய்ய பிடியாணை

உடுவே தம்மாலோக்க தேரரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் துலானி அமரசிங்க இந்த பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கொழும்பு 5 ஹெலன் மெதினியாராம விகாரைக்குள் பொதுமக்களுக்கு தடைகள் ஏற்படும் வகையில் ஒலிப்பெருக்கியை பயன்படுத்தியமைக்கு எதிராக பிரதேசவாசிகள் தாக்கல் செய்துள்ள வழக்கு சம்பந்தமாகவே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் நீதிமன்றம் தம்மாலோக்க தேரருக்கு அழைப்பாணை விடுத்திருந்த போதிலும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதன் காரணமாகவே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலஞ்சம் பெற்ற குற்றத்துக்கு 56 ஆண்டு கடூழிய சிறை இலங்கையில் .

Maash

மன்னாருக்கு விஜயம் மேற்கொண்ட பிரதி அமைச்சர் புத்திக பத்திரன

wpengine

மஹிந்தவின் பிரச்சினைகளுக்கு எஸ்.பி. திஸாநாயக்க கூறும் தீர்வு

wpengine