பிரதான செய்திகள்விளையாட்டு

உசைன் போல்ட் விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டும்- தாய்

உசைன் போல்ட் விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று, தான் விரும்புவதாக அவரது தாயார் ஜெனிஃபர் போல்ட் கூறியுள்ளார்.

ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்கில், 100 ,200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் உசைன் போல்ட் தங்கம் வென்றார். இதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றிலேயே 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தொடர்ந்து மூன்று முறை தங்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையை ”வேகமான மனிதன்” என்றழைக்கப்படும் உசைன் போல்ட் பெற்றிருக்கிறார்.

இந்த நிலையில், ஒலிம்பிக்கில் தனது மகன் தங்கம் வென்றுள்ளதை நினைத்து மிகவும் பெருமைப்படுவதாகக் கூறியுள்ள உசைன் போல்ட் தாயார் ஜெனிஃபர் போல்ட், தனது மகன் திருமண வாழ்க்கைக்குள் தன்னை இணைத்துக்கொண்டால் தான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என்றும், பேரக் குழந்தைகளைக் காண ஆவலுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் டெலிகிராஃப் இதழுக்குப் பேட்டி அளித்திருந்த உசைன் போல்ட், திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் தற்போதைய சூழலில் இல்லை என்றும், 35 வயதைக் கடந்த பிறகே திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

முஸ்லிம் சமூகத்திற்கான ஒரே ஒரு ஊடகமாக இருந்த UTV இற்கு நடந்தது என்ன? பசிலுக்கு விற்கப்பட்டதா ? UTV இழுத்து மூடப்பட்டதா?

wpengine

நாட்டின் எதிர்கால அபிவிருத்திக்காக தேசிய பௌதீக திட்டம் முன்னெடுப்பு!

Editor

மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கவுள்ள முன்னால் அமைச்சர்

wpengine