பிரதான செய்திகள்

உங்கள் மனைவியும் கோபப்படுபவரா? அப்பொழுது ஆண்களே இது உங்களுக்கு

இன்றைய காலத்தில் கணவன் மனைவி உறவில் பிரச்சனைகள் உருவாகுவது சர்வ சாதாரணமாகிவிட்டது.

வீட்டிற்கு சென்றாலே மனைவி சும்மா எரிந்து விழுந்துக்கொண்டே இருக்கிறாள் .., என்று ஆண்கள் கூறுவதை கேட்டிருப்போம். அதற்கான சில வழிமுறைகள் இதோ,
அலுவலகம் முடிந்து வீடு திரும்பும்போது, தொலைபேசியில் அழைத்து, அவர்களுக்கு பிடித்த தின்பண்டங்களை கூறி.., அதனை வாங்கி வரவா என கேட்பது அவர்களை மகிழ்விக்கும்.

மனைவின் பிறந்த நாள், குழந்தைகள் பிறந்த நாள், திருமண நாள் ஆகியவற்றை ஞாபகத்தில் வைத்து கொண்டு பரிசுப் பொருள்களை வாங்கி கொடுத்தாலும் அதன் மூலம் உங்கள் மீது மரியாதையும் பாசமும் கூடும்.

புதிதாக ஒரு ஆடையை மனைவி அணிந்திருந்தால்., உடனே பாராட்டு தெரிவியுங்கள். இந்த ஆடையில் ரொம்ப அழகாக இருக்க என்று சொல்லி பாருங்கள். உங்களுக்கு சிறப்பான கவனிப்பு கிடைக்கும்.
எப்பொழுதும் முகத்தை கோபமாக வைத்து கொள்ளாமல், அவ்வப்போது அல்லது மனைவியை பார்க்கும் போதாவது சிரித்து சந்தோஷப்படுத்துங்கள்.

விடுமுறை நாட்களில் உங்களுக்கு தெரிந்த உணவு வகைகளை சமைத்து அசத்துங்கள். சமையலறை பொருட்களை கவனித்து தீரும் நிலையில் உள்ள மளிகைப் பொருட்களை வாங்கிவந்து ஆச்சரியப்படுத்துங்கள்.

எப்பவும் அம்மாவை தொந்தரவு செய்து வேலைவாங்கும் குழந்தைகளை ஒரு இரண்டு மணிநேரம்உங்கள் கண்காணிப்பில் வைத்து கொள்ளுங்கள். இவை போன்ற சில விடயங்கள் மூலம் உங்க மனைவியின் எரிச்சல் குணத்தை குறைக்க முடியும்.

Related posts

எல்லப்பர் மருதங்குளம் முதியோர் இல்லத்திற்கு விசேட மதிய உணவு வழங்கல்

wpengine

லொறி சாரதியை தாக்கிய பொலிஸ் அதிகாரி விளக்கமறியலில்!

Editor

உலக தலைவர்களின் ஆதரவை பெறுவது ஒரு வகை கலை என்கிறார் மைத்திரி!

Editor