“உங்களை நம்பி போட்டோம் வோட்டு, எங்களுக்கு வைச்சிட்டீங்களே வேட்டு” , “விண்ணைத் தொடும் விலை

நாட்டில் பொருட்களின் விலைகள் உயர்வடைந்து செல்வதனை கண்டித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இன்றைய தினம் தலாவாக்கலை நகரில் இவ்வாறான ஓர் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்பரத்தின் வழிகாட்டுதலில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பொருட்களின் விலை ஏற்றத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“உங்களை நம்பி போட்டோம் வோட்டு, எங்களுக்கு வைச்சிட்டீங்களே வேட்டு” , “விண்ணைத் தொடும் விலை வாசியை குறையுங்கள்” என பல்வேறு கோசங்கள் எழுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உரத்தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை மற்றும் அடக்குமுறைகளக்கு எதிராக இந்தக் கண்டனப் பேரணி முன்னெடுக்கப்படுவதாக தமிழ் முற்போக்குக் கூட்டணி தெரிவித்துள்ளது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares