பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

ஈஸ்டர் தாக்குதலில் உயிர்நீத்த மக்களுக்காக மன்னாரில் விசேட திருப்பலி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம் பெற்று இன்று ஏப்ரல் 21 ஆம் திகதி 2 வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில் குறித்த தற்கொலை குண்டு தாக்குதலில் உயிர் நீத்த மக்களுக்காக மன்னாரில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் இன்று புதன் கிழமை(21) காலை 5.45 மணியளவில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் அந்தத் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

இதன் போது ஏப்ரல் 21 இடம் பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் உயிர் நீத்த மக்களுக்காக  இறைபிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டதோடு,மலர் தூவி அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இதில், பாடசாலை மாணவர்கள் மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதேவேளை மன்னார் மாவட்டத்தில் உள்ள ஆலயங்களிலும் விசேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதோடு, கத்தோழிக்க தேவாலயங்களுக்கு இராணுவம் மற்றும் கடற்படையினர் இணைந்து விசேட பாதூகாப்பை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எஸ்.றொசேரியன் லெம்பேட்

Related posts

சிறையில் உள்ள மாணவர்களை சந்தித்த இராஜாங்க அமைச்சர் ஹரீஸ்

wpengine

வருமானம் பெறும் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டம்

wpengine

இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பொன் விழா – 2016

wpengine