ஈமானை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் இஸ்லாமிய மாநாடு -காத்தான்குடியில்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் இயங்கியவரும் தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பின் ஏற்பாட்டில் ஈமானை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் இஸ்லாமிய மாநாடு      25-03-2016 நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை புதிய காத்தான்குடி-01 றிஸ்வி நகரில் இடம்பெறவுள்ளது.

அன்றைய தினம் மாலை 6.30 மணி தொடக்கம் இரவு 10.00மணி வரை இடம்பெறவுள்ள மேற்படி  இஸ்லாமிய மாநாட்டில் ‘இஸ்லாம் ஓர் தனித்துவமான மார்க்கம்’ எனும்  தலைப்பில் அஷ்ஷெய்க் பீ.எம்.அஸ்பர் (பலாஹி)யும் ‘இஸ்லாம் தடை செய்யும் மிகப் பெரும் அநியாயம்’ எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் ஏ.ஹாதில் ஹக் (அப்பாஸி)யும் சிறப்புரை நிகழ்த்தவுள்ளனர்.

குறித்த மாநாட்டில் அனைத்து இஸ்லாமிய சகோதர,சகோதரிகளையும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பு வேண்டுகோள் விடுக்கின்றது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares