பிரதான செய்திகள்

இஸ்லாமிய பெண்ணை போன்று முகம் மூடிய ஆண்

கண்கள் மட்டும் தெரியும் வகையிலான முகத்தினை மூடிய பர்தா உடையணிந்து பஸ்ஸில் ஏறிய இளைஞனொருவனை பதுளைப் பொலிசார்  இன்று முற்பகல் கைது செய்துள்ளனர்.

தெமோதரையைச் சேர்ந்த 26 வயது நிரம்பிய எஸ்.ஏ. ஜயவர்த்தன என்ற இளைஞனே பர்தா உடையணிந்திருந்த நிலையில் பதுளைப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டவராவார்.

இவ் இளைஞன் இஸ்லாமியப் பெண்போன்று, பதுளை பஸ் நிலையத்திலிருந்து பசறை செல்லும் இ.போ.ச. பஸ்ஸில் ஏறிய போது, இவர் குறித்து சந்தேகம் கொண்ட பயணிகள் சிலர் ரோந்து சேவையில் ஈடுபட்டிருந்த பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கவே, பொலிசார் குறித்த நபரைக் கைது செய்தனர்.

மோசடியொன்றில் ஈடுபடும் பொருட்டே, இவ் இளைஞன் பஸ்ஸில் பயணிக்க முற்பட்டிருக்கலாமென்று பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

பதுளைப் பொலிசார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 

Related posts

இன்று புத்தளத்தில் அமைச்சர் ஹக்கீமுக்கு வரவேற்பு (படங்கள்)

wpengine

மூத்த ஊடகவியலாளர் மாணிக்கவாசகம் காலமானார்!

Editor

கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் வடுக்கள் ஆறவில்லை

wpengine