இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பொன் விழா – 2016.

(நாச்சியாதீவு பர்வீன்)

இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் இவ்வாண்டு நிறைவடைவதற்குள் இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பெருவிழா ஒன்றை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக அதன் செயலாளர் அஸ்ரப் சிஹாப்தீன் தெரிவித்தார் .

முஸ்லிம்கள் தமிழுக்கு வழங்கிய இலக்கியப் பொக்கிஷங்கள் பற்றிய விழிப்புணர்வு விழா முதன் முதலாக 1966ம் ஆண்டு மருதமுனை அல்மனார் மகா வித்தியாலயத்தில் முகம்மது (ஸல்) அவர்கள் பிறந்த தினத்தில் நடந்தேறியது. அது முதற்கொண்டு தமிழக இஸ்லாமிய இலக்கியக் கழகம், இஸ்லாமிய தமிழ் இலக்கியன் கழகம், பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம், இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் ஆகிய அமைப்புகள் அவ்வப்போது சர்வதேச இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகளையும் பிரதேச இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழாக்களையும் நடத்தி வந்திருக்கின்றன, வருகின்றன.

இம்மாநாடுகள், விழாக்கள் மூலம் பல்வேறு அரிய நூல்கள் மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளதுடன் முஸ்லிம்களில் தமிழ் இலக்கியப் பங்களிப்பு, முஸ்லிம்கள் வரலாறு, வாழ்வியல் மற்றும் இன்னோரன்ன அம்சங்கள் பற்றி ஐநூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளும் வெளியிடப்பட்டு வந்துள்ளன.

இஸ்லாமிய தமிழ் இலக்கியம் பற்றிய முதல் விழா நடைபெற்று இந்த ஆண்டுடன் 50 வருடங்கள் பூர்த்தியடையும் நிலையில் இவ்வாண்டு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள இலக்கிய விழாவானது பொன் விழாவாகவும் அமையவிருக்கிறது.

அண்மையில் ஒன்று கூடிய இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இவ்விழாவைச் சிறப்புற நடாத்துவதற்கு முன் மொழியப்பட்டுத் தீர்மானிக்கப்பட்ட அம்சங்களாவன:-

01. விழாக் குழு ஒன்றை அமைப்பது

02. விழாவைக் கொழும்பில் நடத்துவது

03. பங்களிப்புக்களை வழங்க விரும்புவோரை இணைத்துக் கொள்வது

04 கிடைக்கப் பெறும் நிதிக் கேற்றப ஒருநாள் நிகழ்வாக அல்லது இருநாள் நிகழ்வாக இவ்விழாவை நடத்துவது

05. விழா பற்றிய ஆலோசனைகளை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்வது

06. ஆறு தலைப்புக்களின் கீழ் ஆய்வுக் கட்டுரைகளைக் கோருவது

07. விழாக் குழு அமைக்கப்பட்ட பின்னர் ஏனைய அம்சங்களைக் கலந்துரையாடி முடிவுக்கு வருவது

ஆய்வரங்கத் தலைப்புக்களும் ஆய்வுக் கட்டுரைகளுக்கான தலைப்புக்களும் ஒரு வார காலத்துக்குள் பத்திரிகைகள், இணையத் தளங்கள் மூலம் வெளியிடப்படும். ஆலோசனைகளையும் பங்களிப்புக்களையும் பற்றிப் பின்வரும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க முடியும்.

ashroffshihabdeen@gmail.com

செயலாளர்
இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம்

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares