பிரதான செய்திகள்

இஸ்லாமியர்களின் ஹஜ் பெருநாள் 2 ஆம் திகதி

புனித ஹஜ்­ஜுப்­பெ­ருநாள் எதிர்­வரும் 2ஆம் திகதி சனிக்­கி­ழமை கொண்­டா­டப்­படும் என கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் அறி­வித்­துள்­ளது. ஹிஜ்ரி 1438 புனித துல்ஹஜ் மாதத்­துக்­கான தலைப்­பி­றையை தீர்­மா­னிப்­ப­தற்­கான மாநாடு நேற்று மாலை மஹ்ரிப் தொழு­கையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்­ளி­வா­சலில் இடம்­பெற்­றது.

இம்­மா­நாட்டில் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா,கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள உறுப்­பி­னர்கள், கொழும்பு மேமன் சங்க உறுப்­பி­னர்கள் மற்றும் உல­மாக்கள் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.

நாட்டின் எப்­பி­ர­தே­சத்­திலும் துல் ஹஜ் மாதத்­துக்­கான தலைப்­பிறை தென்­பட்­ட­தாக ஆதா­ர­பூர்­வ­மான தக­வல்கள் கிடைக்­கா­த­மையால்  புனித துல் கஹ்தா மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து நாளை 24ஆம் திகதி துல் ஹஜ் மாதத்தின் முதலாம் நாள் ஆரம்­பிக்­கப்­ப­டு­கின்­றது. அத­ன­டிப்­ப­டையில் துல் ஹஜ் மாதத்தின் 10ஆம் நாளான எதிர்­வரும் செப்­டம்பர் மாதம் 2ஆம்  திகதி சனிக்­கி­ழமை புனித ஹஜ்­ஜுப்­பெ­ருநாள் கொண்­டா­டப்­படும் எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

Related posts

முல்லைத்தீவு மண்ணில் றிஷாட்,ஹூனைஸ் சஜித்துடன் (படம்)

wpengine

காணி கிடைக்கும் வரை முள்ளிக்குளம் மக்கள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்-சுரேஸ் பிரேமச்சந்திரன்

wpengine

இனவாதிகளின் அட்டூழியங்களுக்கு முடிவு கட்ட ஒன்றிணைந்த வேலைத்திட்டம் தேவை அமைச்சர் றிசாட்

wpengine